2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் தவறி வீழ்ந்து சிறுமி பலி

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தோட்டப்பகுதியிலுள்ள ஆற்றில், லிந்துலை மெக்பேப் தோட்டத்தை சேர்ந்த தியாகராஜா யாலினி என்ற 4 வயது சிறுமி இன்று (29) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வரும் நிலையில், சிறுமியும் அவருடைய தாயாரும் லபுக்கலை தோட்டத்திலுள்ள உறவினர்;  வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

மேற்படி சிறுமியின் தாயார், தொழிலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள ஆற்றுக்கு சகோதரியுடன் உடைகளை கழுவ சென்றுள்ளார். இதன்போது இவ்வனர்த்தம் நிகழ்துள்ளது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் முயற்சி பயனளிக்கவில்லை.

சிறுமி தவறி விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 அடி தொலைவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .