2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

19 ஐ வரவேற்கின்றோம்: சட்டத்தரணி மாரிமுத்து

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வரலாற்றின் நிகழ்வாக மூன்றில் இரண்டு, பெரும்பான்மையுடன் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறியது குறித்து பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் சார்பில் தமது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதாக பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவிததார்.

19 ஆவது திருத்தச்சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கு கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பத்தை இத்தருணத்தில் மலையக மக்கள் சார்பில் நாம் மனதார வரவேற்கின்றோம்.

37 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காண்பித்த அளப்பரிய அர்ப்பணிப்புக்கும் மகத்தான சேவைக்கும் எமது கௌரவத்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .