2025 ஜூலை 12, சனிக்கிழமை

இறம்பொடையில் தீ விபத்து

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

இறம்பொடை நகரில் அமைந்துள்ள கடை தொகுதியில் வெள்ளிக்கிழமை (01) இரவு  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று கடைகள் சேதமடைந்துள்ளதென கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீவிபத்தில், பகுதி அளவில் 02 கடைகளும் முற்றாக ஒரு கடையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சேதமடைந்த பொருட்களின் பெறுமதி குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .