2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அரசு ஆவணம் செய்யவேண்டும்

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களையும் ஒரு சாதாரண தொழிலாளராகக் கருதுவதுடன் அவர்களுக்கும் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அரசு ஆவணம் செய்யவேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கத் தலைவி மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம், வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம், செங்கொடிப் பெண்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய மேதின ஊர்வலம் கண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

வீட்டுப் பணியாளர்களுக்கான சட்ட விதிகளை அமுல்ப்படுத்த அரசு முன்வர வேண்டும். வீட்டு வேலைத் தொழிலாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு தொழிற் சங்க விடயங்களில் பங்குகொள்ள தடை வித்திப்பதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகளுமின்றி உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் 25 வேலை நாட்களை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வீடமைப்புக் காணிகளை வழங்கும் போது எதுவித வேறுபாடுகளையும் கருத்திற்கொள்ளாது தொழிலாளர் என்ற ரீதியில் அணுகப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மே தின ஊர்வலம் கண்டி புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி கண்டி, தெய்யானவலை எட்ன்மன் சில்வா மைதானத்தை அடைந்தது. பின்னர், அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .