Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 மே 29 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
வறுமை கல்விக்கு தடையாக அமைய கூடாது என்பதற்காக அரசாங்கம் பெறுமளவிலான முதலீட்டை கல்விக்காக ஒதுக்குகின்றது. எந்தவொரு நாட்டிலுமில்லாதவாறு எமது நாட்டில் கல்வியை கற்கக் கூடிய வசதி வாய்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறைப் பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கல் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனை என்பவற்றில் கூடுதலான பணங்களை சேகரித்த திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவித்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வாழ்வின் எழுச்சி பிரதேச உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாறறிய அவர்,
'வறுமை காரணமான மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுவிடக் கூடாது என்ற உன்னத உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அரசு வருடாந்தம் பல கோடிக்கணக்கான பணங்களை கல்விக்காக செலவுசெய்து வருகின்றன.
இலவச பாடசாலைப் புத்தகம், இலவச சீருடை, பாதணிகள், மதிய போசனம், இலவச பால், புலமைப்பரிசில்கள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து வருகின்றன.
அதேபோன்றுதான் கல்விக்காக சமுர்த்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற திவிநெகும திணைக்களத்தின் மூலம் உயர் கல்வியை தொடருகின்ற திவிநெகும குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வருகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago