2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காவத்தையில் இன்று ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

காவத்தை கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அம்மூவரையும் விடுதலை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவத்தை நகரில் கொட்டகெத்தன பிரதேசவாசிகள்; இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயாராகியுள்ளனர்.

காவத்தை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களையும் பூட்டுமாறு காவத்தை வர்த்தக சங்கத்தின் சகல கடைகளுக்கும் அழைப்பு விடுத்ததையடுத்து கடைகள் அனைத்தும் தற்போது பூட்டப்பட்டுள்ளன.

மேற்படி ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக வேண்டி காவத்தை நகரில் பொலிஸாரும் விசேட அதிரடைப் படையினர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, காவத்தை நகருக்கு வரும் பொது மக்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் திருப்பி அனுப்புகின்றனர். அத்தோடு நகரில் எவரையும் நிற்க வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் காவத்தை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், காவத்தை நகரை அண்மித்த பொது மக்கள் இன்றை தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், தற்போது கொட்டகெதன பிரதான வீதியில் குவிந்த வண்ணம் உள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .