Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை ஓரணியில் திரட்டி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
இன்று வட கிழக்குத் தவிர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவர்களுக்கான உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமது கூட்டணி இதய சுத்தியுடன் செயற்படும். மேலும், எமது கூட்டணிக்கு இன்று அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்றைய அரசாங்கத்திலுள்ள மலையக அமைச்சர்கள் ஊடாக மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்து வருகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் உரிய அழுத்தங்களை மேற்கொள்வதற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எமது கூட்டணியின் மூலமாக மலையகத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், உபதலைவர் சிவானந்தன், அமைப்பாளர் புகழேந்திரன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
47 minute ago