Gavitha / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் கடமைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பெரும்பாலானோருக்கு இதுவரை தேர்தல் கடமைகளுக்கான கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கட்டாயம் தேர்தல் கடமைகளில் ஈடுபடவேண்டும் என்று தேர்தல் திணைக்களத்தின் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் கடமைகளுக்காக விண்ணப்பித்த அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு இன்றுவரை தேர்தல் கடமைகளுக்கான கடிதம் கிடைக்கப்படாத நிலையில் உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, தேர்தல் கடமைகளுக்காக விண்ணப்பித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பெரும்பாலானோர்களுக்கு தேர்தல் கடமைகளுக்கு கடிதம் வராத காரணத்தால் இம்முறை பெரும்பாலான அரச உத்தியோகஸ்தர்கள் தேர்தல் கடமைகளுக்காக விண்ணப்பிக்க தவறிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago