Kogilavani / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக்
வாக்குச்சீட்டை வீடியோவாக பதிவுசெய்த இளைஞனை கண்டி, அங்கும்புரை பொலிஸார் திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
கண்டி, அங்கும்புரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வைத்தே மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாக்களிக்கச் சென்ற இவ் இளைஞன், வாக்குச்சாவடியில் வைத்து தனது கையடக்கத்தொலைபேசியில் வாக்குச்சீட்டை வீடியோவாக பதிவுசெய்துள்ளார்.
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், உடனடியாக மேற்படி இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago