Janu / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை, மெராயா நகரின் வோல்ட்ரீம் தோட்டப் பகுதியில் கடந்த 28 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கொள்கலன் (Container), நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய லிந்துலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் சக்திவேல், நகருக்கு அருகிலுள்ள காணியை அபகரிக்கும் நோக்கில் இந்த கொள்கலனை அங்கே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, லிந்துலை பொலிஸாருக்கும் ஆகரப்பத்தனை பிரதேச சபைக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, லிந்துலை பொலிஸார் குறித்த உப தலைவருக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த கருத்தைப் பரிசீலித்த நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச, செவ்வாய்க்கிழமை (28) க்கு முன்னர் குறித்த கொள்கலனை அவ்விடத்திலிருந்து அகற்றி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு லிந்துலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அந்தக் கொள்கலனை வைத்ததாக கூறப்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் சக்திவேல், அதனை அவ்விடத்திலிருந்து அகற்றி பழைய இரும்பு வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

23 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago