Janu / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரபத்தனை- டயகம பகுதியிலுள்ள தேசிய பாற் பண்ணையில் இருந்து சுமார் 450 கறவைகள் பண்ணையில் உள்ள அதிகாரியால் அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது என பண்ணையில் பணி புரியும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து பெரும் தொகையான நிதியை செலவு செய்து இந்த பண்ணைக்கு இந்த பசுக்கள் 2010 ஆண்டு தேசிய மிருக வளர்ப்பு அரச நிறுவனம் மூலம் கொண்டு வரப்பட்டன.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட கறவைகள் பண்ணையில் தற்போது இல்லை என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பாற்பண்ணையில் 53 தொழிலாளர்கள் சேவையில் உள்ளனர்.
பண்ணையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், கறவைகளை இறைச்சிக்காக நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், அக்கரபத்தனை ஆகிய பகுதிகளிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
தேசிய பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், சகல வசதிகளும் கொண்ட பண்ணையாக அக்கரபத்தனை- டயகம பண்ணை உள்ளது எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களின் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக பண்ணை அதிகாரி சுஜி பெர்ணாந்துவிடம் வினவிய போது “தொழிலாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு தொலைபேசி மூலம் பதில் சொல்லவும் முடியாது. பண்ணைக்கு வந்தால், அதிகாரிகள் தகுந்த விளக்கம் தருவார்கள்” என்றார்.
செ.தி.பெருமாள்.டி சந்ரு
9 minute ago
19 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
26 minute ago
39 minute ago