2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

5ஆவது மாத பயணத்தில் சமூக சமையலறை

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
 
ACT FOUNDATION ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக சமையலறை நாட்டின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றது. மலையகத்திலும் தன் சேவையை  ஆரம்பித்து செயற்படுத்துகின்றது. 
 
ஐந்து மாதங்களாக இயங்கி வரும் இச்சமூக சமையலறையில் தினந்தோறும் சராசரியாக  200 க்கும் மேற்பட்டவர்களுக்கான மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது. பண்டாரவளையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக 13,000க்கும் மேற்பட்டோருக்கு பகலுணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
 
 கொட்டகலை பகுதியில் அறநெறி பாடசாலை மற்றும் மாங்குளம், பண்டாரவளையில் வருமானம் குறைந்தவர்கள், முதியோர், விதவைகள் என அனைவரும் இச்சமூக சமையலறையின் மூலம் பயனடைகின்றதோடு தொடர்ந்தும் எமது நாட்டில் இன்னும் சில பகுதிகளில்  ACT FOUNDATION ஊடாக சமூக சமையலறையை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .