2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

72 வருடகால ஆட்சியில் இருந்த “சகலரும் பொறுப்பு”

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு, இந்தளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை கடந்த 72 வருடங்களாக ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு கூறவேண்டுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பலியை ஒருசிலர் மீது மட்டுமே போடமுடியாது என்றார். 

இயற்கை அனர்த்தங்களால், நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சனிக்கிழமை (19) சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிந்தமைக்கு, பிரதானமாக ஜே.வி.பி பொறுப்பு கூறவேண்டும். ஜே.வி.பி காலத்திலேயே நிலைமை மோசமாகியிருந்தது என்று தெரிவித்த அவர், அந்தக் கட்சியினால் (ஜே.வி.பி) ஒருபோதும் ஆட்சிப்பீடம் ஏற முடியாது என்றார். 

நாவலப்பிட்டியவில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழையால், ஒன்பது பாலங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை புனரமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு 23 பில்லியன் ரூபாய் மதிப்பிட்டுள்ளார். அதில், 150 மில்லியன் ரூபாயை ஒதுக்கி, பாலங்களை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .