2026 ஜனவரி 21, புதன்கிழமை

75,000தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

மத்திய மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் பிரமுகர்கள்,சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய முக்கிய கூட்டம் மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் மாளிகையில் இன்று (5) காலை  நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ‘ஜீவன் குமாரவேல் தொண்டமான்‘ மத்திய மாகாணத்தில் வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு   கொரோனா தடுபூசி வழங்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் இன்றைய பொருளாதார சூழ் நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் அந்நியச் செலாவணிக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மழை,வெய்யிலையும் பொருட்படுத்தாது உழைத்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தடுபூசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கோரிக்கையாக முன்வைத்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்த கோரிக்கைக்கு  அமைவாக எதிர்வரும் 11ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்திற்கும், மாத்தளை மாவட்டத்திற்கும் கொரோனா தடுபூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுபூசிகளும், மாத்தளை மாவட்டத்திற்கு 25ஆயிரம் தடுபூசிகளுமாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 பொது சுகாதார காரியாலய பிரிவில் முதல் ஆறு பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  அதிகமாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் பொகவந்தலாவ,அம்பகமுவ, லிந்துல்ல, கொட்டகலை, நுவரெலியா,மற்றும் நுவரெலியா மாநகர சபை போன்ற பொது சுகாதார அதிகாரி பிரிவுகளில் 50ஆயிரம் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. இதன்போது  60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும், தெரிவு செய்யபட்ட கர்ப்பிணி தாய்மார்கள,மற்றும் தோட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் தடுபூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X