Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகின்றனர்.
அந்தவகையில் 35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை போட்மோர் தமிழ் வித்தியாலய அதிபர் கிரிஸ்டோபர் சார்ள்ஸ், 34 வருட அரச சேவையிலிருந்து ஹோல்புறூக் ஆரம்ப பாடசாலை அதிபர் சுப்ரமணியம் புஸ்பனீனா, 35 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கார்லிபேக் தமிழ் வித்தியாலய அதிபர் அந்தோனிமுத்து சவரிமுத்து, 31 வருட அரச சேவையிலிருந்து நானுஓயா கிளாஸ்கோ தமிழ் வித்தியாலய அதிபர் சுப்பையாபிள்ளை கோகிலவாணி,35 வருட அரச சேவையிலிருந்து சென்கிளையார் தமிழ் மகா வித்தியால அதிபர் ஆறுமுகம் சத்தியமூர்த்தி, 40 வருட அரச சேவையிலிருந்து பத்தனை தமிழ் மகா வித்தியால அதிபர் சுப்பையா செல்வம் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.
இவர்கள் நுவரெலியா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் மாணவர்கள் அதிகளவில் சித்திபெறுவதற்கு பாரிய பங்காற்றியுள்ளார்கள்.
இவ்வாறு நுவரெலியா கல்வி வலயத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிய இவர்களை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர், வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர், உதவி கல்விப் பணி;ப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .