2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

யுவதியை வானில் கடத்திச் சென்று வல்லுறவு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.எம்.பௌஸான்)

தம்மை இரகசியப் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலிய வல்லுறவு புரிந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரகஸ் ஹந்திய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது:-

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் 22 வயதான பெண் ஒருவர் தனது சகோதரியுடன் பியகம பேரகஸ் சந்திப் பகுதி வீதியில் மாலை 6.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த வானொன்றில் வந்தவர்கள் தாங்கள் இரகசிய பொலிஸார் என்று கூறி அவர்களை விசாரணை செய்ய இருப்பதாகவும் வானில் ஏறுமாறும் கூறியுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே மேற்படி யுவதியை கடத்திச் சென்று பியகம பிரதேசத்திலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் வைத்து வல்லுறவு புரிந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பியகம பொலிஸார், ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதோடு மேலும் இருவரையும் சம்பந்தப்பட்ட வானையும் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாந்த திலகரட்ன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .