Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண மாநகர அபிவிருத்தி திட்டம், இன்று வெள்ளிக்கிழமை (29) சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முக்கிய விடயமாக, கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான வழிவகை குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் அனைத்தையும் கொழும்புக்கு வெளியே கொழும்பை அண்டிய பகுதிகளில் அமைப்பதற்கு திட்டமிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரின் சன நெருக்கடி மற்றும் மாசடைதல் பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புறக்கோட்டையிலுள்ள மெனிங் பொதுச்சந்தையை, பேலியகொடைக்கு மாற்றுவதற்கு தேவையான கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, நாளை சனிக்கிழமை (30) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
53 minute ago