2021 மே 08, சனிக்கிழமை

இளம் எழுத்தாளர்களுக்கான செயலமர்வு

Princiya Dixci   / 2016 மே 18 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களையும் யுவதிகளையும் ஊக்குவிக்கும் வகையில் முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சிறுகதை செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கொழும்பு, வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 09 மணிமுதல் பகல் 02 மணிவரை நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வில் அனுபவம் வாய்ந்த பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளதுடன், தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வுள்ளனர். 

40 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களும், எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் இதில் கலந்துகொள்ள முடியும்.

இலவசமாக நடத்தப்படும் இந்த செயலமர்வின் இறுதியில் பங்குகொண்டவர்களுக்கு முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினால் சான்றிதழ் வழங்கப்படும்.

செயலமர்வில் பங்குகொள்ள விரும்புபவர்கள், தமது விண்ணப்பங்களை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இல.18, 6/1,கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு -06 எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

மேலும், 011- 2505112 மற்றும் 011- 2508170 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்களுடைய பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X