Gavitha / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, நாகொட பிரதேசத்தின் தல்கஸ்வெல எனும் பகுதியில், முச்சக்கரவண்டியொன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட யுவதியொருவர் முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருக்கும் போது தப்பிச் சென்ற சம்பவம் சி.சி.டீ.வி கமெராவில் பதிவாகியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி, அலுவலொன்றின் காரணமாக முச்சக்கரவண்டியொன்றில் ஏறியுள்ளார். எனினும் முச்சக்கரவண்டியின் சாரதி, தன்னை இறக்கி விட வேண்டிய இடத்தில் இறக்கிவிடாது 3 கிலோமீற்றரையும் தாண்டி முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியை நிறுத்தக் கூறியும் அதன் சாரதி நிறுத்தாக காரணத்தினால், அவர் முச்சக்கரவண்டியிலிருந்து வெளியே பாய்ந்துள்ளார். தல்கஸ்வெலவை வசிப்பிடமாக கொண்ட 30 வயதுடைய குறித்த யுவதி தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் அங்குள்ள உணவகமொன்றின் சி.சி.டீ.வி கமெராவில் பதிவாகியுள்ளதையடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .