Editorial / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர்.
வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரியாலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர். அங்கு வீதித்தடை போட்டப்படிருந்தது.
அதனையும் மீறி செய்வதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளது.
இதேவேளை, மஹரகமவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த தேரர் உள்ளிட்ட ஒரு குழுவினர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கு எரிபொருள் இல்லை, பெட்ரோல் இல்லை, காஸ் இல்லை, எங்களுக்கு யார் சாப்பாடு கொண்டுவந்து தருவார்கள்.
நாங்கள் இவ்விடத்திலேயே நின்கின்றோம். இருக்கும் இடத்தில் எங்களை இருக்கவிடுங்கள், உங்களுக்கு பொலிஸ் நிலையம் இருக்கிறது. எங்களுக்கு என்ன இருக்கிறது. வீட்டுக்குச் செல்லமுடியாது, பிள்ளைகள் பட்டிணியில் வாடுகின்றனர். சாப்பாடு யார் கொண்டுவந்து தருவார்கள், நீங்கள் தருவீர்களா என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025