2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கார் பின்நோக்கி நகர்ந்ததில் நபர் பலி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்துவ - பத்தரமுல்ல பிரதான வீதியில் பிரவுமிஹல பகுதியில் பெண்ணொருவர் நிறுத்தி வைத்திருந்த கார், பின்நோக்கி நகர்ந்து நபரொருவர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்ற இவ்விபத்தில் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய திவங்க கவின் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார். 

மேலும் இவ்விபத்தின் போது குறித்த கார், இரு முச்சக்கரவண்டிகள் மற்றும் கப் ஒன்றுடனும் மோதியதில் அவையும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனையின் பொருட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காரின் சாரதியான பெண்ணை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X