Gavitha / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் சட்டவிரோத சிகரெட்டுக்களுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதையும் மீறி சிகரெட்டுகளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை இலங்கையே முதலாவது தடவையாக நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடிப்பதன் காரணமாக, வருடத்துக்கு சுமார் 20,000 பேர் வரை இலங்கையில் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிகரெட் பைக்கற்றுகளில் எச்சரிக்கை புகைப்படங்கள் பதிக்கப்பட்டிருக்காது. இவ்வாறான எச்சரிக்கை புகைப்படங்கள் இன்றி சிகரெட்டுக்களை இறக்குமதி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.
பீடி புகைப்பதும் தற்போது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர், பொது இடங்களில் புகைத்தலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .