Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
ஜேர்மன் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு, இன்று (27) வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஜேர்மன் நாட்டின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்ததுடன்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் நாட்டுக்கான விஜயத்தின் போது விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாட்டிடுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஜேர்மன் நாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி, இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்குவதல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்;பாடு தொடர்பாகவும்; பிரதி அமைச்சரினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கான நிதிகளை பெற்றுத்தருமாறு ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார்.
இதனை ஜேர்மன் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் செய்து தருவதாக இதன்போது பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.

7 minute ago
20 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
28 minute ago
29 minute ago