Editorial / 2024 ஜனவரி 15 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

14 வயதான சிறுவனை கத்தியால் கொத்தி, கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களாக தலைமறைவாக இருந்த ராகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதானன திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
ராகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சிறுவனின விரலை துண்டாக்க பயன்படுத்தி கத்தியை கண்டுபிடிக்க விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டார்.
ராகம பொடி என்றழைக்கப்படும் குர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான டிலாருக் பிரசாந்த சில்வா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பித்த ராகம பொலிஸ் அதிகாரிகள்,
ஜனவரி 4 ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர் தனது அயல் வீட்டில் வசித்த 14 வயதுடைய சிறுவனை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளனர். சிறுவனின் இடது கையில் ஒரு விரல் முற்றாக துண்டிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் வைத்தியசாலையில் இருந்து வெளிவந்த பின்னர், கடந்த 13ஆம் திகதி வரை பொலிஸில் ஆஜராகாத சந்தேக நபர், வைத்தியசாலையில் இருந்து சிறுவன் விடுவிக்கப்பட்ட பின்னர் பொலிஸில் சரணடைந்தார். அதன்பின்னரே கைது செய்யப்பட்டார் என நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷ்ரமிந்திர சொய்சா, சிரேஷ்ட அதிகாரியொருவர் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரயோகித்த அழுத்தத்தின் காரணமாக முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
விரலை இழந்த இச்சிறுவனை போதைப்பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டி கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமாறும் சட்டத்தரணி ஷ்ரமிந்திர சொய்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து வாதப்பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்ததுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago