2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஜனாதிபதி, தேரர்கள் சந்திப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அகில இலங்கை சாசனப் பாதுகாப்பு சபையின் தேரர்களுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பௌத்த கல்வியின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், சம்புத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

புத்தசாசனம் தொடர்பான சில சட்டங்களை துரிதமாக திருத்தி அமைத்தல்பற்றி மகா சங்கத்தினர் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதுடன், புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அறநெறி பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கி, அறநெறிக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அகில இலங்கை சாசனப் பாதுகாப்பு சபையின் தலைவர் வண.வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர், அகில இலங்கை சாசனப் பாதுகாப்பு சபையின் பொறுப்பாளர் வண.கோணதுவே குணானந்த தேரர் உள்ளிட்ட அகில இலங்கை சாசனப் பாதுகாப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தி 14 மாவட்டங்களைச் சேர்ந்த தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இதில் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X