Princiya Dixci / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
நாட்டிலுள்ளவர்களின் தொழிலைப் பாதிக்காத வண்ணம் அரசாங்கம் தனது ஒப்பந்தங்களை வெளிநாடுகளுடன் மேற்கொள்ளட்டும். அதற்கு நாங்கள் ஒரு பொழுதும் குறுக்கிட மாட்டோம் என அரச ஆயுர்வேத வைத்தியச் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.
பொரளையில் அமைந்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதானது, எமது நாட்டிலுள்ள அனைத்து மட்டத் தொழிலாளர்களுக்கும் அது பாரியளவிலானதொரு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
ஆயுர்வேத வைத்தியத் தொழிலைப் பொருத்தமட்டில் அது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடு. கிராமப்புறங்களிலுள்ள கிராமிய வைத்தியரிலிருந்து நகரில் உள்ள ஆயுர்வேத பட்டதாரிகள் வரை அனைவரது தொழிலும் செல்வாக்குச் செலுத்தும். இலங்கையை விட இந்தியா ஆயுர்வேத மருத்துவ முறையில் சிறந்ததொரு நிலையில் உள்ள நாடு. ஆயுர்வேத பட்டதாரிகள் பலருக்கும் தொழில் வாய்ப்பற்றவர்களாக மாறவேண்டிய நிலையேற்படும்.'
'ஆயுர்வேத வைத்திய பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய 800 பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். தற்போதைக்கு ஆயுர்வேத மருத்துவத்துறையில், 180 வெற்றிடங்கள் உள்ளன. அதனை நிரப்புவதற்கு அரசாங்கம் முனையலாம் தானே?' எனக் கேள்வியெழுப்பினார்.
'அரசாங்கம், ஆயுர்வேத மருத்துவ முறையினை முன்னேற்றுவதற்கென எந்தவொரு வழிவகையிலும் விரும்பவில்லை என்பதே உண்மையாகும். இதுவரை காலமும் ஆயுர்வேத திணைக்களத்தின் தலைவர்களாக ஆங்கில மருத்தும் படித்தவர்களை நியமித்திருந்தமையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.'
'இந்த மருத்துவமுறையில் முன்னேற்றுவதற்கு உலகின் பல நாடுகளும் முனைகின்றன. இலங்கையில் 1962 ஆம் ஆண்டே ஆயுர்வேத மருத்துவத்துக்கான திணைக்களம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கென்ற ஒரு சட்டத்தையும் அரசியலமைப்பில் கொண்டுள்ளது. இந்நிலையில் அத்துறையினைக் கண்டும் காணாதது போல் அரசாங்கம் இருப்பது வருந்தத்தக்கதே. இத்துறையை எதிர்காலத்தில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முனைய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
6 minute ago
19 minute ago
27 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
27 minute ago
28 minute ago