2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

நானே! பிரதமர்: இராஜினாமா செய்யேன்; தினேஷ்

Editorial   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்திகளும் அறிக்கைகளும் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உதவியைக் கோரியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை தொடர்பில், கேட்டபோதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை குழப்பும் வகையிலேயே இவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. அதிலொன்றுதான் இது என்றார்.

பிரதமர் பதவி தொடர்பில் அவ்வாறான யோசனையோ அல்லது கலந்துரையாடலோ இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .