Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஓர் அரசாங்கம் பதவிக்குவந்த அடுத்த நாள் முதல்இ அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்' என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கத்துக்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்கி நாட்டை முன்கொண்டு செல்ல உதவுவது பெரும்பாலான நாடுகளின் அரசியல் நிகழ்ச்சித் திட்டமாக இருந்தபோதும்இ எமது நாட்டு அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளுக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை விரட்டியடிப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யப்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொழில் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'சமூக உரையாடலும் தொழில்நிலைய கூட்டுறவும்' என்ற நாடளாவிய ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுஇ நேற்று (17) முற்பகல் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
புதிய அரசாங்கம் புதியதோர் தொலைநோக்குடன் பொருளாதாரஇ சமூக அபிவிருத்திக்காக முன்வைக்கும் திட்டங்களை குழப்பிவிடாது அதனை வெற்றிகொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவது நாட்டுக்காக கடமைகளை மேற்கொள்ளும் அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சகலரினதும் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்துறையில் நிலவும் பிளவுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அரசாங்க மற்றும் தனியார்த்துறை ஊழியர்களுக்கிடையே இருக்க வேண்டிய சகோதரத்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்திஇ சிறந்த சேவையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
2015 சமூக உரையாடலும் தொழில் நிலைய கூட்டுறவும் நாடளாவிய ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .