Editorial / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
சுற்றாடல் நட்பு மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு - ஏத்துக்கால கிராமத்தை, குப்பைகள் மற்றும் டெங்கு அற்ற பிரதேசமாக மாற்றும் வேலைத்திட்டம், நேற்று (20) ஏத்துக்கால தேவாலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், கத்தோலிக்க மதத் தலைவர்கள், நீர்கொழும்பு மாநகர உதவி ஆணையாளர் ருவந்தி பெர்ணான்டோ, நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் எக்ஸ்படிட் குரூஸ், முன்னாள் தலைவர் அஜித் வீரசிங்க, கழகத்தின் முக்கியஸ்த்தர்கள், நீர்கொழும்பு பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில், குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், குப்பைகளை முறையாக அகற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் டெங்கு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர், ரொட்டரி கழகத்தின் அங்கத்தவர்கள் குழுக்களாகப் பிரிந்து, ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று குப்பைகளைப் போடுவதற்கான தொட்டிகள், குப்பைகளை அகற்றுவதற்கான பைகள் மற்றும் ஷொப்பிங் பைகளுக்கு மாற்றீடாக பொருட்களை போடுவதற்காக பயன்படுத்தும் பைகள் என்பவற்றை வழங்கினர்.
இந்த வேலைத்திட்டத்தை, நீர்கொழும்பு நகரின் ஏனைய பிரதேசங்களில் எதிர்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாகக் கழகத்தின் தலைவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago