Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் வளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான தொழுகை அறை திறப்பு விழா, மஸ்ஜிதுல் அப்ரார் ஜமாத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹனபி தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் அழைப்பின் பேரில், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் பிரதம அதிதியாக்க கலந்துகொண்டு இதனைத் திறந்துவைப்பார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், குவைத் தூதுவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக, சீனன்கோட்டையைச் சேர்ந்த பியுடி ஜெம் அதிபதி சமூக சேவையாளர் அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர், 30 இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.
பெண்களுக்கான தொழுகை அறை மற்றும் ஜனாஸாக்களை கழுவி கபனிடலுக்கான அறை, பிரமுகர் ஓய்வு அறை என்பன இக்கட்டடத்தில் அடங்குகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago