Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை பிரதேச சபையில் மின்சாரப் பணியில் ஈடுபட்டுவரும் அஜித் தயாவன்ச (வயது 53) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே, இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை பிரதேச சபையின் அளுத்கம பிரதான அலுவலகத்தின் பின்னால் வைத்தே, தன்னைத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில். அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசோக கருணாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago