Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகமான பிரிஸ்டன் மற்றும் இலங்கை பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக முதலீட்டு சங்கம் மற்றும் இலங்கை தகவல் முகாமைத்துவ மற்றும் விஞ்ஞான கல்லூரிக்கிடையில் வெவ்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. இந்நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் (ஓ) ஜெனரல் சையத் சகில் ஹிசைன் மற்றும் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் அதிகாரிகள், இலங்கை பாகிஸ்தான் நட்புறவு வர்த்தக முதலீட்டு சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தகவல் முகாதைத்துவ மற்றும் விஞ்ஞான கல்லூரியின் நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
பேராசியர் சுல்பிகார் அலி க்யுரேசி, அன்வர், முஸ்தபா,இப்தீகார் அஸீஸ் ஆகியோர் தங்களது நிறுவனங்கள் சார்பாக இதில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது அனைத்து தரப்பினரும் இரு நாடுகளுக்கிடையிலான சிவில் அமைப்புக்கள் மற்றும் கலாசார, மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையே, கல்வியியல் ஒத்துழைப்பு, நல்லிணக்கம், சமாதானம் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
இப்புரிந்துணர்வு உடன்படிக்ககையானது வௌ;வேறு துறைகளில் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பங்களை விஸ்தரிப்பதுடன் புத்தக வெளியீடுகள், மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும்; ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் போன்ற அறிவுசார் விடயங்களை பகிர்வதன் மூலமாக ஒத்துழைப்பை வழங்கவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
இந்நிறுவனங்களின் உறுப்பினர்கள், துறைகள் மற்றும் மாணவர்களுக்கிடையில் கூட்டு செயற்பாடு மற்றும் கலாசார தொடர்புகள், கல்வி என்பனவற்றை அபிவிருத்திசெய்ய, இவ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவிபுரியும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சையத் சகில் ஹிசைன் கூறினார்.
அத்துடன் மாணவர் பரிமாற்ற நிகழ்வுகள் மற்றும் புலமைப்பரிசில்கள் என்பவற்றை உருவாக்குவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக இவை அமையுமென கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பேராசிரியர் சுல்பிகார் இரு இலங்கை மாணவர்களுக்கு BS. MSc. MPhil மற்றும் PHD பட்டப்படிப்பை சமூக மற்றும் முகாமைத்துவ விஞ்ஞான துறையிலும் பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஏனைய துறைகளிலும் கல்வி கற்பதற்கான புலமைபரிசில்களை அறிவித்தார்.
இப்புலமை பரிசீல் நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினூடாக ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் இடம்பெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளுக்கு இலங்கை நிபுணர்களை அனுப்பிவைக்குமாறு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை பிரதிநிதிகளிடம் போராசியர் சுல்பிகார் அலி குரேஸி இதன்போது கேட்டுக்கொண்டார்.
முதலாவது மாநாடு சீனா - பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு 'மாற்றங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் மார்ச் 14 முதல் 15 வரை 2016 பிரிஸ்டன் பல்கழைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் 'இஸ்லாம் மற்றும் பௌத்தத்தின் புனித சித்திரம் மற்றும் கட்டடக்கலை' என்ற தலைப்பின் கீழ்; இரண்டாவது மாநாடு பாகிஸ்தான் பாரம்பரிய அமைப்பு; தாய்லாந்தின் இளைஞர் பொளத்த அமைப்புடன் இணைந்து ஒக்டோபர் மாதம் 10,11 வரை 2016 இடம்பெறவுள்ளது.
இதன் நிமித்தம் உள்ளூர் பிரயாணம் , தங்குமிட வசதி உணவு என்பன பாகிஸ்தானிய நிபுணர்குழுவினால் ஒழுங்கு செய்துதரப்படும். இவ் 8 பேர் அடங்கிய நிபுணர் குழு பேராசிரியர் சுல்பிகார் தலைமையின் கீழ், துறைசார் கற்கையின் நிமித்தம் இலங்கையில் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .