Editorial / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவனமுவ பழைய பத்தினி ஆலய வருடாந்த பெரஹராவை முன்னிட்டு, இன்று (12) முதல் நாளை (13) வரை ஹங்வெல்ல – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்த பெரஹரா, இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 1 மணி வரையும் மீண்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் குறிப்பிட்ட பிரதான வீதியில் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, வாகன நெரிசலைக் குறைப்பதற்கு, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, ஹங்வெல்ல முதல் கொழும்பு வரையில் செல்லும் வாகனங்கள், ரணால சியம்பலாகஹ சந்தி ஊடாக, அத்துகிரிய நோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, கடுவலை முதல் ஹங்வெல்ல நோக்கி செல்லும் வாகனங்கள், கடுவலை – வெலே சந்தி ஊடாக அத்துகிரிய நோக்கி செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago