Princiya Dixci / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹொரோய்ன் வைத்திருந்த பெண் ஒருவரையும் ஆண்ணொருவரையும், இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் மற்றும் 22 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்ளப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 14 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 138,200 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .