2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

2 பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த அலைபேசி

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடகு வைக்கப்பட்ட அலைபேசியை மீட்பதற்காக சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை அடித்து கொள்ளப்பட்ட சம்பவம் அங்குலான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அவருடைய மாமாவின் நெஞ்சில் தாக்கியதில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் தாயும் அவருடைய மூன்று மகன்மார்களும் வௌ்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் சட்டத்தரணியின் ஊடாக பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாமா, கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

சந்தேகநபரை அந்தப் பெண்ணிடம் அலைபேசியை அடகுவைத்து 4 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். அந்த அலைபேசியை மீட்டெடுக்க வேண்டுமாயின் 8 ஆயிரம் ரூபாய் தேவையென, அந்தப் பெண்,   மரணமடைந்தவரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு இணங்கி, அலைபேசியை மீட்டெடுப்பதற்காக சென்றபோது, அலைபேசியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் இவ்விருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னரே அப்பெண்ணின் மூன்று மகன்மார்களும் இணைந்து அவரையும் அவருடைய மாமாவையும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதிலொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .