Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
முஸ்லிம்களின் மத சட்டதிட்டங்களை நடை முறைப்படுத்தும் சபையான வக்பு சபைக்கான தலைவர் இது வரை நியமிக்கப்படாமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், பிரதமர் டி.எம்.ஜயரட்ணவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பௌத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் பற்றிய ஆலோசணைக் குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்விடயம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
வக்ப் சபைக்கான உறுப்பினர்களின் நியமனம் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட போதும், தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமையால் சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து வெகுவிரைவில் இந் நியமனத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .