2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வடகொழும்பில் இலவச மூக்குக்கண்ணாடி விநியோகம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் வேண்டுகோளுக்கிணங்க சமூக சேவைகள் அமைச்சினூடாக முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான எல்.குருநாதன் தலைமையில் மூக்குக்கண்ணாடி வழங்கப்படவுள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 
கொழும்பு-15, மட்டக்குளி, சென். ஜேம்ஸ் மாவத்தை, இல.100இல் இடம்பெறும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை (28) சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெறவுள்ளது. இரண்டாவது முறையாக நடாத்தப்படும் இச் சேவையில் மக்களின் குறைபாடுகளையும் கேட்டறியப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களின் மக்களின் பிரச்சினைகளையும் எமது நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கவனத்தில் கொண்டுவரும் பட்சத்தில் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். பயன் பெற விரும்பும் அனைத்து மக்களும் கலந்து கொண்டு இலவசமாக வழங்கப்படும் மூக்குக்கண்ணாடியை பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X