2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மலசல கூடங்களை அமைப்பதற்கான நிதி வழங்கல்

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸெட்.சாஜஹான்


மஹர தேர்தல் தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மலசல கூடங்களை அமைப்பதற்கான நிதி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) ஹுனுப்பிட்டி ஸாஹிரா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமான ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, தலா 10,000 படி ஒன்பது பேருக்கு நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஹென்டரமுல்ல, ஹுனுப்பிட்டி இளைஞர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.இஸ்மத், ஹுனுப்பிட்டி ஸாஹிரா வித்தியாலய அபிவிருத்திச் சங்க பொருளாளர் நிசாம், பொது சுகாதார பரிசோதகர் ருவான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஹென்டரமுல்ல, ஹுனுப்பிட்டி இளைஞர் சங்கம் மலசல கூடங்களை அமைப்பதற்கான மேலதிக வசதிகளை பயனாளிகளுக்கு செய்து கொடுக்கவுள்ளதாக இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X