2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அல் ஹிக்மா கல்லூரிக்கு புதிய கட்டடம்

A.P.Mathan   / 2014 மார்ச் 21 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட புதிய கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான கே. எம். எம். நாளிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஹமீடியாஸ் நிறுவனத்தின் தலைவர் பௌசுல் ஹமீட், அம்ஜா டிரவல்ஸ் உரிமையாளர் எச். எம். அம்ஜதீன், பூக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம். உவைஸ், டயமன்ட் நிறுவன உரிமையாளர் ஜிஸ்தி பௌமி, பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர்களான டொக்டர் எச். எம். எச். இஸ்மத், ஏ. எம். பௌசுல் அமீர் உட்பட முக்கியஸதர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி இந்த முதற்கட்ட நிர்மாண பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. சகல வசதிகளுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்திற்கு 'பழைய மாணவர் சங்க கட்டடம்' (PPA Building) என பெயரிடப்பட்டுள்ளது.

புதிய வகுப்பறைகளுக்குத் தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான புதிய தளவாடங்களும் அன்றைய தினம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படது.

கொழும்பு வாழ் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் வாழைத்தோடம் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் ஹிக்மா கல்லூரியின் பௌதீக வள மேம்பாட்டையும் கருத்திற் கொண்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய வேலைத்திட்டங்களின் ஓர் அம்சமாகவே இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான ஸாதிக் ஷிஹான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X