2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள்

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பயணிக்கும் பஸ்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை ஏற்றாது செல்வதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ - 32) வீதியில் பயணிக்கும் பஸ்கள் மிகக்குறைந்தளவிலேயே பயணிக்கின்றன. இந்நிலையில்; பஸ்கள் தங்களை ஏற்றாமல் செல்வதால் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியின் வழியாக குறைந்தது 1 மணித்தியாலத்துக்கு ஒரு பஸ்ஸே பயணிக்கின்றது. பாடசாலை முடிவடைந்ததும், அந்தத் தருணத்தில் வரும் பஸ்களில் ஏறுவதற்காக ஆசிரியர்கள் விரைந்து வரும்போதும், பஸ்கள் அவர்களை விட்டுவிட்டுச் செல்கின்றன.

காலையிலும், குறைந்தளவு பஸ்கள் செல்வதினால் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவிடப்படுகின்றமையால், ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்தப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஆசிரியர்களாக உள்ளனர்.
போதியளவு பஸ்கள் இன்மையால், ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு பணிக்குச் செல்ல முடியாதுள்ளது. குறித்த நேரத்துக்கான பஸ்ஸை ஆசிரியர்கள் தவறிவிட்டால், அடுத்த பஸ்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .