2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தனியார் வகுப்புகளுக்கு வடக்கிலும் கட்டுப்பாடு

எம். றொசாந்த்   / 2017 மே 25 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வடமாகாணத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துவது தொடர்பான தொடர்பான நியதிச்சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக, நேற்று (25) நடைபெற்ற வடமாகாண சபை; அமர்வின் போது தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை விதிக்கும் வகையிலும் மற்றைய நாட்களில், மாலை 6 மணிக்கு பின்னர் வகுப்புக்களை நடத்தாதிருக்கும் வகையிலான சட்ட அமுலாக்கலை மேற்கொள்ளும் வகையிலுமே, இந்த நியதிச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இவ்வாறு வகுப்புக்களை தொடர்ச்சியாக நடத்துவதால் மாணவர்கள், உடல் - உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றமையைச் சுட்டிக்காட்டியே, தனியார் வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான நியதிச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, சபையில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .