Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
க. அகரன் / 2017 மே 31 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) - கிளிநொச்சி, விக்னராசா துஷ்யந்தன் (வயது 35) - யாழ்ப்பாணம், முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 37) - ஒட்டுசுட்டான், அஜித் ரோகண (வயது 48) - பேலியகொட ஆகிய நான்குபேர் தமது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago