2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

10 வயது மாணவன் பாம்பு தீண்டிப் பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

பாம்புக்கடிக்கு இலக்காகிய பத்து வயது மாணவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பாத்திமா கல்லூரியில் தரம் 5 இல் கல்வி பயிலும் உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த ஞானசீலன் நிக்ஸன் றொபேட் என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 25 ஆம் திகதி காலை வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனுக்கு  என்ன நடந்ததென்று தெரியாத நிலையில் பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிறுவனின் உடல்நிலை மோசமடையவே உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்குதான் சிறுவனைப் பாம்பு தீண்டியிருப்பது தெரியவந்தது.

ஆயினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் குறித்த சிறுவன் கடந்த 26 ஆம் திகதி காலை மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பாம்புக்கடியால் பலியான மாணவன் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .