2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக்கான பாதைகள் குறித்த கருத்தரங்கு

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ந.பரமேஸ்வரன்)

 

 

பருத்தித்துறை, அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் 'அறிவு சார்ந்த அபிவிருத்திக்கான பாதைகள்' என்னும் தொனிப்பொருளில் முதலாவது பகிரங்க மன்றம் எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் வடக்கில் அறிவு சார்ந்த அபிவிருத்திக்கான பாதைகள் என்னும் தலைப்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நுகர்வோர் கடன் மற்றும் சவால் ஆசிய பசுபிக் சவால் முகாமையாளர் நிரஞ்சன் நடராஜா, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கச் செயலாளர் த.மகாசிவம் ஆகியோர் கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.

வளவாளராக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தைச் சேர்ந்த கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .