2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மீண்டும் யாழ். சென்றார் எஸ்.பி. திஸநாயக்க

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(சரண்யா)

அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துக் கொண்டவுடன் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் திரும்பிச் சென்றார்.

நலன்புரி நிலையங்களில் இருந்து வந்து பல்கலைக்கழத்தில் பயிலும் 425 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் நிதியுதவியினையும் அவர் வழங்கினார்.

பரமேஸ்வராக் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஸ்தாபகர் தின விழாவில் உயர்கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவிருந்தார். எனினும் புதிய அரசியலமைப்புத் திட்டத்துக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க யாழ்.விஜயத்தினை இடைநிறுத்தி, திடீரென கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனால் பரமேஸ்வராக் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், பி.ப.2.30 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் எளிமையாக நடைபெற்ற வைபவம் ஒன்றில் நலன்புரி நிலையங்களில் இருந்து  வந்து  பல்கலைக்கழகத்தில் பயிலும் 425 மாணவர்களுக்கு 5000 ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .