2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட செயலகத்தில் நிருபமாராவுடன் சந்திப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altயாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் யாழ். மாவட்ட செயலகத்தில் பலதரப்பட்டோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் திணைக்களத் தலைவர்களை இவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதனையடுத்து, இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கவென இந்திய அரசால் அனுப்பி  வைக்கப்பட்ட கூரைத்தகடுகளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து வழங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .