2021 ஜூன் 19, சனிக்கிழமை

வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளத் தவறியோருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளத் தவறியோருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தெடர்பாக அவர் தெரிவித்ததாவது:

2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில் இப்பதிவுகளை மேற்கொள்ளத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உரியவர்கள் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம். இதுவே அவர்களுக்கான கடைசிச் சந்தர்ப்பம். பல்வேறு பிச்சினைகள் காரணமாக சிலர் தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறியிருப்பர். இதற்காகவே இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்குரிய பெயர் நீக்கம், புதிய இணைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் பிரதேச செயலகங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வழங்கப்படும்.

இது தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவற்றையும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .