2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக விக்னேஸ்வரன்

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண  கல்விப் பணிப்பாளராக ப.விக்னேஸ்வரன் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பதவியேற்கவுள்ளார்.

வலிகாமம் கல்வி வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவரை வடமாகாணக் கல்விப் பணிப்பாளராக வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது.

இந்த நியமனக் கடிதத்தை வட மாகாண பொதுச்சேவை ஆணைக் குழு நேற்று இவருக்கு அனுப்பி இருந்தது.
 
வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பதவிகளுக்கு வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அண்மையில் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரலுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவிருந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் விசேட பணிப்பின் பேரில் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரான ப.விக்னேஸ்வரன் புதிய பதவிக்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் ஆறாம் திகதி உத்தியோபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார் என்று தெவிக்கப்பட்டது. இதுவரை காலமும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வீ.இராசையா, அரசசேவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பித்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .