2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மிகின்லங்கா விமான சேவையின் கிளைக்காரியாலயம் யாழில் திறப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(சரண்யா, தாஸ்)

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மிகின்லங்கா விமான சேவையின் கிளை ஒன்றை யாழ். நகரில் திறந்து வைத்தார்.

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பௌசி இன்று முற்பகல் மிகின்லங்கா விமான சேவையின் கிளையை சம்பிருதாய பூர்வமாக நாடாவெட்டித் திறந்து வைத்து விமான பயணத்துக்கான முதல் ரிக்கட்டையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் யாழ். மாவட்ட செயலகத்துக்குச் சென்று யாழ். அரச அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

altaltaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .