2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மக்களுக்காக படையினரின் வேலைத்திட்டங்கள் - மகிந்த ஹத்துருசிங்க

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(தாஸ்)

வடக்கு மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் முகமாக பல்வேறு வேலைத் திட்டங்களில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாகவே ஆதார வைத்தியசாலைகளுக்குத் தேவையான தளபாடங்கள் இன்று வழங்கப்படுகின்றன.

இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்டப் படையணிகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.
 
யாழ். மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளுக்குத் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில் - அவுஸ்திரேலியாவில் உள்ள எமது நண்பர்களின் நிதியுதவியுடனேயே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. – என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான கட்டில்கள் மற்றும் விடுதிகளுக்குத் தேவையான கட்டில்கள் என்பன வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .